19. பரிபாஷை

அடியேனுக்கு தெரிந்த சில:

 1. திருவாபரணம் – பெருமாளுக்கு சாற்றப்படும் ஆபரணம்
 2. திருவாராதனம் – பெருமாளுக்கு பூஜை செய்தல்
 3. பெருமாள் தீர்த்தம்திருவாராதனம் முடிந்த பின் கொடுக்கப்படும் தீர்த்தம்
 4. பெரிய திருவடி – கருடன்
 5. சிறிய திருவடி – அனுமன்
 6. திருமணி ஸேவித்தல் – பூஜையின் போது மணி அடிப்பது
 7. திருப்பாவாடை – பிரசாதம் நைவேத்யம் செய்வது
 8. திருவந்திக்காப்பு – வீதி உலா முடிந்து சமர்பிக்கப்படும் ஆரத்தி
 9. திருப்பரிவட்டம் – பெருமாள் வஸ்திரம்
 10. பீதாம்பரம் – பெருமாள் வஸ்திரம்
 11. திருத்துழாய் – துளசி
 12. திருஆலவட்டம் – விசிறி
 13. திருக்காவேரி – பூஜைக்கான ஜலம் வைக்கும் பாத்திரம்
 14. திருக்காப்பு நீக்குதல் – ஸாலக்கிராமம் எழுந்தருளிய பெட்டியின் கதவை திறப்பது
 15. கோவிலாழ்வார் – ஸாலக்கிராமம் அல்லது விக்ரஹம் எழுந்தருளிய மரப்பெட்டி
 16. சாற்றுமுறை – சாற்று (முடிவு) பாசுரங்களை ஒதுதல்
 17. சாற்றுப்படி – சந்தனம் சாத்துவது அல்லது அலங்காரம்
 18. வட்டில் – அர்க்யம், பாத்யம் சமர்பிககப்படும் பாத்திரம்
 19. அடைக்காய் – தாம்பூலம்
 20. எச்சரிக்கை – பிரசாத கோஷ்டி முடிவு பற்றிய அறிவிப்பு
 21. திருக்கண் வளருதல் – தூங்குதல்
 22. அரவணை – பெருமாளின் பாம்புப்படுக்கை
 23. திருப்பள்ளிக்கட்டில் – பெருமாளின் கட்டில்
 24. திருநடை சார்த்துவது – கோவில் கதவு முடுதல்
 25. திருப்பள்ளி எழுச்சி – பெருமாளை துயிலெழுப்புவது

TO BE CONTINUED…

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s