21. திருப்பாற்கடல்

சிறப்பு:

  • 107வது திவ்யதேசம் திருப்பாற்கடல்.
  • கிட்டிடும் பரமபதம், கிட்டாது திருப்பாற்கடல்.
  • ஷீராப்தி எனும் திருப்பாற்கடல்.
  • அர்ச்சிராதி மார்கத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • பிராகிருத பிரளயத்தில் அழியும் திருப்பாற்கடல்.
  • விபவ அவதாரங்களின் உருவாக்கம் திருப்பாற்கடல்.
  • பிள்ளை லோகச்சார்யார் குறிப்பிட்ட ‘கூப்பிடு கேட்குமிடம்’ திருப்பாற்கடல்.
  • பிரம்மா, தேவர்கள் குறை நீங்கும் இடம் திருப்பாற்கடல்.
  • ஆதிசேஷன் படுக்கையில் சயனத்திருக்கோலம் திருப்பாற்கடல்.
  • வியூக வடிவமாய் நாரணன் திருப்பாற்கடல்.
  • நாரணன் நான்காக பிரிந்த நிலையில் திருப்பாற்கடல்.

முதல் நிலை:

  • முதல் நிலையில் வியூக வாசுதேவனாய் திருப்பாற்கடல்.
  • வியூக வாசுதேவனின் இருப்பிடமான ஆனந்தம் திருப்பாற்கடல்.
  • வியூக வாசுதேவன் புரியும் படைத்தல், காத்தல் & அழித்தல் திருப்பாற்கடல்.
  • க்ருத யுகத்தில் வெள்ளை நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
  • த்ரேதா யுகத்தில் சிவப்பு நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
  • துவாபர யுகத்தில் பச்சை நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.
  • கலி யுகத்தில் கரிய நிறமாய் வியூக வாசுதேவன் திருப்பாற்கடல்.

இரண்டாம் நிலை:

  • இரண்டாம் நிலையில் பிரத்யும்னனாய் திருப்பாற்கடல்.
  • பிரத்யும்னனின் இருப்பிடமான பிரமோதம் திருப்பாற்கடல்.
  • பிரத்யும்னன் புரியும் படைத்தல் திருப்பாற்கடல்.
  • க்ருத யுகத்தில் பச்சை நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
  • த்ரேதா யுகத்தில் கரிய நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
  • துவாபர யுகத்தில் வெள்ளை நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
  • கலி யுகத்தில் சிவப்பு நிறமாய் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.
  • வேதத்தை நிர்வகிக்கும் பிரத்யும்னன் திருப்பாற்கடல்.

மூன்றாம் நிலை:

  • மூன்றாம் நிலையில் அனிருத்தனாய் திருப்பாற்கடல்.
  • அனிருத்தனின் இருப்பிடமான சம்மோதம் திருப்பாற்கடல்.
  • அனிருத்தன் புரியும் காத்தல் திருப்பாற்கடல்.
  • க்ருத யுகத்தில் கரிய நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
  • த்ரேதா யுகத்தில் வெள்ளை நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
  • துவாபர யுகத்தில் சிவப்பு நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
  • கலி யுகத்தில் பச்சை நிறமாய் அனிருத்தன் திருப்பாற்கடல்.
  • வேதத்தை மீட்கும் அனிருத்தன் திருப்பாற்கடல்.

நான்காம் நிலை:

  • நான்காம் நிலையில் சங்கர்ஷனாய் திருப்பாற்கடல்.
  • சங்கர்ஷனின் இருப்பிடமான அமோதம் திருப்பாற்கடல்.
  • சங்கர்ஷன் புரியும் அழித்தல் திருப்பாற்கடல்.
  • க்ருத யுகத்தில் சிவப்பு நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
  • த்ரேதா யுகத்தில் பச்சை நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
  • துவாபர யுகத்தில் கரிய நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
  • கலி யுகத்தில் வெள்ளை நிறமாய் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.
  • வேதத்தை கொடுக்கும் சங்கர்ஷன் திருப்பாற்கடல்.

புராணம்:

  • சுவயாம்புவ மனுவின் புத்திரரான ப்ரியவிரதனால் உருப்பெற்ற திருப்பாற்கடல்.
  • பிரபஞ்சத்தின் ஏழு கடல்களில் ஆறாவது திருப்பாற்கடல்.
  • பிரபஞ்சத்தின் ஏழு துவீபங்களில், ஆறாவது துவீபத்தை உள்ளடக்கிய திருப்பாற்கடல்.
  • நாம் வசிக்கும் முதலாம் துவீபமான 100,000 யோஜனை விட்டம் கொண்ட ஜம்பு துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • ஜம்பு துவீபத்தை உள்ளடக்கிய உப்பால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.Jb
  • இரண்டாம் துவீபமான 200,000 யோஜனை விட்டம் கொண்ட ப்லாக்ஷ துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • ப்லாக்ஷ துவீபத்தை உள்ளடக்கிய கரும்பு சாற்றால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
  • மூன்றாம் துவீபமான 400,000 யோஜனை விட்டம் கொண்ட ஷல்மாலி துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • ஷல்மாலி துவீபத்தை உள்ளடக்கிய கள்ளால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
  • நான்காம் துவீபமான 800,000 யோஜனை விட்டம் கொண்ட குஸ துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • குஸ துவீபத்தை உள்ளடக்கிய நெய்யால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
  • ஐந்தாம் துவீபமான 1,600,000 யோஜனை விட்டம் கொண்ட க்ரௌன்ச துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • க்ரௌன்ச துவீபத்தை உள்ளடக்கிய தயிரால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.
  • ஆறாம் துவீபமான 3,200,000 யோஜனை விட்டம் கொண்ட ஷாக துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • ஷாக துவீபத்தை உள்ளடக்கிய பாலால் ஆன கடல் திருப்பாற்கடல்.
  • ஏழாம் துவீபமான 6,400,000 யோஜனை விட்டம் கொண்ட புஷ்கர துவீபத்தில் இல்லா திருப்பாற்கடல்.
  • புஷ்கர துவீபத்தை உள்ளடக்கிய நீரால் ஆன கடலில் இல்லா திருப்பாற்கடல்.

tp

திருப்பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமனுக்கு பல்லாண்டு

Leave a comment