13. திருமந்திரம்

தோன்றிய இடம்:

விபூதியில் காற்பங்கு லீலாவிபூதி
லீலாவிபூதியில் பல கோடி அண்டங்கள்
பல கோடி அண்டங்களில் ஒரு அண்டம்
ஒரு அண்டத்தில் பதினான்கு லோகங்கள்
பதினான்கு லோகத்தில் ஒன்று பூலோகம் 
பூலோகத்தில் ஏழு துவீபங்கள்
ஏழு துவீபத்தில் ஒன்று ஜம்பு துவீபம் 
ஜம்பு துவீபத்தில் ஒன்பது வர்ஷங்கள்
ஒன்பது வர்ஷத்தில் ஒன்று பாரத வர்ஷம்
பாரத வர்ஷத்தின் மத்தியில் மேரு மலை
மேரு மலையின் வடக்கு பகுதியில் உள்ளது பத்ரிகாஸ்ரமம்.

விவரணம்:

பத்ரிகாஸ்ரமத்தில் நாராயணனே நரனாக(மனிதனாக) நர – நாராயண ரூபத்தில் அனுக்ரகித்தது தான் அஷ்டாக்ஷர திருமந்திரம் “ஓம் நமோ நாராயணாய
திருமந்திரம் பிறவி சூழலை அடக்கும் என எல்லா ஆழ்வார், ஆசார்யர்களும் சாதித்துள்ளனர். இதனை அநேகம் பேர் அன்றாடம் சொல்லியும் மனத்தால் நினைத்தும் வருகிறோம்.
இதோட அர்த்தத்தையும் அறிந்து கொண்டால் மேலும் பகவத் ஞானம். அர்த்தம் அறிந்தவர்கள் மீண்டும் ஒரு முறை மனனம் பண்ணிகொள்ள பிரார்த்திக்கிறேன்.
மூன்று பதங்கள் கொண்டது ஓம்(ஓர் எழுத்து) + நமோ(இரண்டு எழுத்து) + நாராயணாய(ஐந்து எழுத்து).

ஓம்:

ஓம் என்ற சொல் தான் பிரணவம், இதிலிருந்து தான் அனைத்தும் தொடக்கம்.
பிரணவம் தான் நமக்கும் நாராயணனுக்கும் உள்ள தொடர்பை தெரிவிக்கிறது. பிரணவமான ஓம் எழுத்தை  பிரித்தால் அ , உ , ம என்று அமையும்.
அ = பரமாத்மா, உ = சேஷத்துவம், ம = ஜீவாத்மா
ஓம் = பரமாத்மாவுக்கே அடிமை ஜீவாத்மா (பெருமானை தவிர மற்ற பேருக்கு நாம் சேஷ படமாட்டோம்).

நமோ:

ந = இல்லை, மோ = எனக்கு
நமோ = எனக்காக என குறுகிய மனப்பான்மையோடு நில்லாமல் பிறருக்காக பகவானுக்காக என்று முடிந்த வரையில் இருத்தல் வேண்டும்

நாராயணாய:

நாராயணாய எழுத்தை  பிரித்தால் நார + அயணம் என்று அமையும்.
நார = நீர், அயணம் = இருப்பிடம்
நாராயணாய = நீரை இருப்பிடமாக கொண்டிருப்பவன் (அ) அனைத்துக்கும் இருப்பிடம் (அ) அனைத்திலும் இருப்பவன்.

ஓம் நமோ நாராயணாய

Leave a comment