28. பாவம் – புண்ணியம்

பாவ – புண்ணிய கர்மங்கள் இருக்கும் வரை பிறவி சூழல் அறுப்படாது.

சரி! கண்ணனை சரணடைந்து  முக்தி பெற்றால் இந்த பாவ- புண்ணிய கர்மங்களின் நிலை என்ன?

ஆத்மா மோக்ஷம் பெற்று வைகுண்டம் புகும் போது பாவ – புண்ணிய கர்மங்களும் கூடவே செல்லுமோ? அப்படி இருக்க வாய்ப்பில்லை, கர்மங்களை தொலைத்தால் மட்டுமே வைகுண்டத்துக்கு அனுமதி என்று கண்ணனே கீதையில் அருளியுள்ளான்.

பின் கர்மங்களை தொலைப்பது எப்படி என்ற கவலையே கொள்ள தேவையில்லை. சரணாகதியின் தாத்பரியமே நம்மால் எதுவும் ஆவதற்கில்லை பெருமானே பார்த்துக்கொள்.

சரி! நாம் சரணடைந்ததும் பெருமான் எப்படி நம் பாவத்தையும் புண்ணியத்தையும் போக்கி மோக்ஷத்தை அளிக்கிறான் என்று பார்ப்போமா.

எளிமையாக புரிந்து கொள்வதற்காக இரண்டாக பிரிக்கிறேன்.

  • சரணடையும் முன்பு பண்ணப்பட்ட கர்மங்கள்
  • சரணடைந்த பின்பு பண்ணப்பட்ட கர்மங்கள்

சரணடையும் முன்பு பண்ணப்பட்ட கர்மங்களை கண்ணன் எவ்வாறு போக்குகிறான்  என்பதற்கான விளக்கப் படம் கீழே

P1

சரணடைந்த பின்பு பண்ணப்பட்ட கர்மங்களை கண்ணன் எவ்வாறு போக்குகிறான்  என்பதற்கான விளக்கப் படம் கீழே

P2

நாம் அறியாத செய்த பாவங்களை கண்ணன் தன்னுடைய வாத்சல்ய குணம் கொண்டு கண்டுகொள்வதேயில்லை.

கிருஷ்ணா! கிருஷ்ணா!

Leave a comment