01. நம்மாழ்வார்

அத்தியாயம் 1 – அவதார ரகசியம்

த்ரேதா யுகம்…

ஏறத்தாழ 11000 ஆண்டுகள் அயோத்தியில் ராம ராஜ்ஜியம்…

பகவான் ஸ்ரீ ராமர் வைகுண்டத்திற்கு 3 நாட்களில் எழுந்தருள இருந்தார்…

தன்னை தரிசிக்க ஒருவரையும் இனி அனுமதிக்க வேண்டாம் என்று ஆணை லக்ஷ்மணருக்கு…

அச்சமயம் துர்வாசர், ஸ்ரீ ராமரை காண வந்திருந்தார்…

துர்வாசரின் சாபத்தை தவிர்க்க அனுமதித்தார் லக்ஷ்மணர்…

லக்ஷ்மணர் தன் ஆணையை மீறியதால் புளிய மரமாக கிடஎன ஸ்ரீ ராமர் சபித்தார்…

லக்ஷ்மணர் தன் தவறுக்காக வருந்தி ஸ்ரீ ராமர் பாதத்தில் சரணாகதி அடைந்தார்…

ஸ்ரீ ராமர் கூறினார்…

ஓ! என் அன்பே லக்ஷ்மணா! துக்கம் தவிர்…

நான் உணர்ந்தே சபித்தேன்…

என் அன்பு சீதையை காட்டில் வாழ விட்டேன்… அதற்கு பரிகாரமாக 16 ஆண்டுகள் நான் அசைவற்ற பொருளாகி போவேன்…

அந்த காலங்களில், நீ என்னை பிரிந்து இருக்க நான் விரும்பவில்லை. நான் உன் மடியில் அமர்ந்திருப்பேன்…

லக்ஷ்மணர் ஆறுதல் அடைந்து வினவினார் எப்போது?…

வந்தது பதில் கலி யுகம்

மீண்டும் லக்ஷ்மணர் வினவினார் எங்கே?…

தொடரும்…

Leave a comment