17. மாறனேரி நம்பி

பாகம் 1 – ஓலை

காலம்: 11ம் நூற்றாண்டு

தேசம்: பாண்டிய தேசம்

கிராமம்: புராந்தகம்

இடம்: கோவில்

70 அகவை பெரியவர், ஆசார்யர் திருநாடு அலங்கரித்த சேதியை மீண்டும் ஒரு முறை வாசித்தார்.

சேதியின் நம்பகத்தன்மை குறித்து ஐயமில்லை, காரணம் ஓலையை அனுப்பியவர் அவரின் உயிர் தோழர்.

olai

கண்கள் பனித்தன, தாள முடியா துயரத்தில் ஆழ்ந்தார்.

ஆசார்யரின் அந்திம கர்மத்தில் பங்கு கொள்ள இயலாமல் போனது மனதை தைத்தது.

கோவிலில் வாசம் செய்து கொண்டிருக்கும் பகவான் ஸ்ரீனிவாசனை தொழுதார். நீயும் விரைவில் என் திருவடி பற்றுவாயாக என வேங்கடமுடையான் ஆசீர்வதிப்பதாய் பட்டது பெரியவருக்கு. மனம் சற்று தளர்ந்தது.

உடலில் உள்ள வடுக்கள் பெரியவரை வாஞ்சையோடு பார்த்தது, ஆசார்யர் தன்னுடன் இருப்பதாய் உணர்ந்தார். வடுக்கள் காய்ந்து இருந்தன, ஆனால் இலகுவான பிணியாக தோன்றவில்லை.

பிணியின் தாக்கத்தினால் போக்குவரத்து வெகுவாக குறைந்தே இருந்தது. ஆசார்யர் எழுப்பி கொடுத்த கோவிலில் தான் அவர் தஞ்சம்.

மனம் கசிந்து பெரியவர், ஆசார்யர் தனியன் ஜபித்தார்.

யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷ கல்மஷ:
வஸ்துதாமுபயா தோஹம் யாமுநேயம் நமாமிதம்

ஓலையில் கண்ட மற்ற தகவல்களால் அதிர்ச்சி, துக்கம், கலக்கம் அவரை ஒரு சேர ஆக்கிரமித்தது. ஆறுதலான ஒரே விடயம் இளையாழ்வார் (ராமானுஜர்) திருவரங்கம் வந்திருந்து ஆசார்யரின் அந்திம கர்மத்தில் பங்கு கொண்டது.

தொடரும்

Leave a comment