09. பிரமேய சேகரம்

பிரமா என்றால் ஞானம்
பிரமாணம் என்றால் ஞானத்தின் ஆதாரம்
பிரமாதா என்றால் ஞானத்தை உடையவன்
பிரமேயம் என்றால் ஞானத்தின் இலக்கு
பிரமேய சேகரம் என்றால் ஞானத்தின் தலைசிறந்த ஒப்பில்லா இலக்கு

அந்த இலக்கு பகவானான ஸ்ரீமன் நாராயணனே என பிள்ளை லோகாச்சார்யர் ரஹஸ்ய க்ரந்தமான பிரமேய சேகரத்திலும் சாதிக்கிறார். ஆத்மாவும் அவனையே இலக்காக கொண்டால் என்ன நேரும் என்பதை வரிசை க்ரமத்தில் விவரிப்பதே பிரமேய சேகரம்.

இந்த லோகத்தில்:

  • பகவத் கடாக்ஷம் காரணமின்றி ஆத்மாவிற்கு நன்மை பயிக்கும்
  • ஆத்மாவிற்கு பகவானிடம் துவேஷம் நீங்கும்
  • பகவத்- பாகவத விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும்
  • மற்றவை துறத்தல் பகவானை பற்றுதல் என்ற ஞானம் உதிக்கும்
  • சாத்விக சம்பாஷணை உண்டாகும்
  • ஆசார்ய சம்பந்தம் ஏற்படும்
  • துறப்பதில் வைராக்கியமும் பற்றுதலில் பக்தியும் கூடும்
  • பகவான் ஆத்மாவை ஸ்வீகரிப்பான்
  • ஆத்மா பகவானிடம் சேர துடிப்பான்

இந்த லோகத்தில் ஆத்மாவின்  இறுதி நாட்களில் பகவானின் நினைவற்று கிடந்தாலும் முன் கூறிய அனைத்தையும் சீர்த்தூக்கி கரைத்தேற்றுவான் அவன்.

அர்ச்சிராதி மார்க்கத்தில்:

  • ஆத்மா சூஷூம்னா நாடி மூலம் உடலை துறப்பான்
  • அர்ச்சிராதி மார்க்கம் தெரிய தொடங்கும்
  • ஆத்மா பிரயாணிக்க சூக்ஷ்ம உடல் தருவிக்கப்படும் 
  • ஆதிவாஹிகர்கள் வழிகாட்டிகளாக வருவர்
  • ஆத்மா சப்த ஆவரணங்களையும் கடப்பான்
  • ஆத்மா பின் மூல பிரகிருதியை கடப்பான்
  • ஆத்மாவிற்கு விரஜையில் ஸ்நானம்
  • சூக்ஷ்ம உடலும் களையப்படும்

பரமபதத்தில்:

  • அமானவன் (நித்யசூரி) கரம் பற்றி ஆத்மா பரமபதத்தில் நுழைவான்
  • ஆத்மாவிற்கு 8 கல்யாண குணங்கள் கிட்டும்
  • ஆத்மா அப்ராக்ருத (அழிவற்ற) தேகம் பெறுவான்
  • ஆத்மாவிற்கு காலத்திற்கு அப்பாற்பட்ட திவ்யதேசம் கிட்டும்
  • பரமபதத்தில் நுழைந்ததும் அரம்ஹ்ரத தடாக ஸ்நானம்
  • ஆத்மாவிற்கு திவ்ய அலங்காரம்
  • ஆத்மா திவ்ய விமானத்தில் பயணிப்பான்
  • திவ்ய வனத்தை கடந்து திருமாமணி மண்டபத்தை நோக்கி பிரயாணம்
  • ஆத்மாவை அப்சரஸ்கள் அழைத்து செல்வர்
  • ஆத்மாவிற்கு அப்ராக்ருத (ராஜ) கோபுரம் புலப்படும்
  • ஆத்மா கோபுரத்தை கடந்ததும் திவ்ய நகரம் காட்சிப்படும்
  • ஆத்மாவை நகரத்துக்குள் நித்யசூரிகள் வரவேற்பர்
  • ஆத்மா ராஜ மார்க்கம் சாலை வழியே சென்று திருமாமணி மண்டபத்தை அடைவான்
  • ஆத்மாவிற்கு பிரம்ம தேஜஸ் கிட்டும்
  • ஆத்மா திருமாமணி மண்டப கோபுரத்தை கடந்து திருமாளிகைக்குள் நுழைவான்
  • உள்ளிருக்கும் திவ்ய மண்டபமும் கடந்து சபையையும் கடப்பான்

இனி எல்லையில்லா இன்பம், பிறப்பற்ற, இறப்பற்ற நிலை, மூப்பு, பிணி, பசி, உறக்கம் இல்லா நிலை, பகவானுடன் ஐக்கியம், அவனுக்கு கைங்கரியம்.

  • ஆத்மாவிற்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி சமேத வைகுண்டநாதன் தரிசனம் ஆதிசேஷன் பரியங்கத்தில்
  • ஆத்மா பெருமானை சேவிப்பான்
  • பெருமான் அழைக்க ஆதிசேஷன் பரியங்கத்தில் ஏறி அவன் மடியில் அமர்வான்
  • பெருமான் ஆத்மாவை ஆரத்தழுவுவான்,  சம்பாஷணை நடைபெறும்
  • ஆத்மா பகவானின் ஸ்வரூபம், ரூபம், குணம், விக்ரஹத்தை அனுபவிப்பான்
  • ஆத்மாவிற்கு பல உருவங்கள் கிட்டும்

ஆத்மா சர்வ காலத்திலும், சர்வ தேசத்திலும், சர்வ நிலையிலும், சர்வ விதங்களிலும் பரமபதத்தில் எம்பெருமானுக்கு கைங்கரியம் செய்து கிடப்பான்.

முக்கியமான பின்குறிப்பு: இவை அனைத்தும் கிட்டும் ஆசார்யன் உபாயமாக.

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவ ஜீவாதவே நம

Leave a comment