14. சரணாகதி

ஆரம்ப நிலை: பூஜ்யம் 

கருவறையில் எண்ணற்ற ஜென்மங்களின் நினைவுகள்

புண்ணிய பாவ சேர்க்கை கொண்டு இயங்கினேன்

இனி இது நடவாது என சபதம் ஏற்று

நாராயணனை துதித்தேன் உன்னை சேர்வேன் என்று

ஜனித்ததும் சடம் எனை பற்ற, நினைவுகள் மறந்தேன்

சபதம் மறந்தேன், நாராயணனை மறந்தேன்

சடத்தை எரிக்க நான் சடகோபன் இல்லையே

புண்ணிய பாவ கொள்மூதல் 

எண்ணற்ற ஜென்மங்கள்

சுழற்சி

நடு நிலை: கர்ம யோகம்

செயலை செய்தேன் பலனை எதிர்பார்த்து

செயலே பிணைப்பாகி போக

கர்மம் இருக்க யோகத்தை தேடினேன்

செயலே விடுதலைக்கு வழியாக்கி

கர்ம யோகத்தை பற்றினேன்

எண்ணற்ற ஜென்மங்கள்

சுழற்சி

நடு நிலை:  பக்தி யோகம்

பக்தி செலுத்தினேன் கோரிக்கையுடன்

பக்தியும் இல்லை யோகமும் இல்லை

பக்தியே ப்ரமாணம்

நாராயணனே ப்ரமேயம்

எண்ணற்ற ஜென்மங்கள்

சுழற்சி

நடு நிலை:  ஞான யோகம்

ஆசார்யனே ப்ரமாணம்

என்னை அறிந்தேன், பிராணனை உணர்ந்தேன்

ஜடத்தை அறிந்தேன், ஜகத்தை உணர்ந்தேன்

நாராயணனே ப்ரமேயம்

எண்ணற்ற ஜென்மங்கள்

சுழற்சி

இறுதி நிலை: ப்ரபத்தி

ஆசார்யனே ப்ரமாணம்

ப்ரபத்தி (அ) சரணாகதி

நாராயணனே ப்ரமேயம்

சுழற்சி நின்று முக்தி

saranagathi

 ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

Leave a comment