24. தீபாவளி

க்ருத யுகம்

பிரளயத்தின் பிடியில் பூமி சிக்கியது…

இது நைமித்திக அல்லது பிராகிருத பிரளயமோ அல்ல… ஹிரண்யாக்ஷன் என்கிற அசுரனால் உருவாகிய ஒன்று… பூமி பாதாள லோகத்தில் அமிழ்ந்தது…

பிரளயம் நான்கு வகை

  • நித்யம் = மனித பிறப்பு, இறப்பு & மீண்டும் மீண்டும் பிறந்து இறப்பது (ஒரே ஆத்மா வெவ்வேறு உடல்களை தரிப்பது).
  • ஆத்தியந்திகம் = ஆத்மா முக்தி அடைவது.
  • நைமித்திகம் = பிரம்மாவின் ஒரு பகல் பொழுது முடிந்து முதல் மூன்று மேல் லோகங்கள் அழிந்து மீண்டும் உருவாகும். 43,20,00,00,000 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு.
  • பிராகிருதம் = பிரம்மாவின் ஆயுள் முடிந்து பிரபஞ்சமே அழிந்து மீண்டும் உருவாகும், புதிய பிரம்மாவும் பரம்பொருளால் நியமிக்க படுவார். 3,11,04,00,00,00,00,000 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு.

பகவான் விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக மூர்த்தி

அசுரன் பிரம்மாவிடம் பெற்ற வரத்தால், ஸ்ரீமன் நாராயணன் வராக ஸ்வரூபமாய் அவதரித்து ஹிரண்யாக்ஷனை கொன்று, பூமி தேவியை தன் கோரை பற்களால் தூக்கி காத்து ரட்சித்தார்…

vh

ஸ்ரீமன் நாராயணன் கோரை பற்களால் பூமி பிராட்டியை தீண்டியதன் பொருட்டு பிறந்தான் பௌமாசுரன் எனும் நரகாசுரன்.

துவாபர யுகம்

பகவான் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாய் ஸ்ரீ கிருஷ்ணன்

க்ருத யுகத்தில் பிறந்த நரகாசுரனின் அட்டுழியம் த்ரேதா யுகம் கடந்து துவாபர யுகத்திலும் நீடித்தது… பல்லாயிரம் பெண்களை சிறை வைத்து இருந்தான்…

பிராக்ஜோதிஷபுரம் (அசாம்) எனும் இடத்தில், பகவான் கிருஷ்ணன் நரகாசுரனை வதைத்தார்… நரகாசுரனுக்கு முன் முராசுரனையும் அழித்து முராரி எனும் திருநாமமும் பெற்றார்…

நரகாசுரனின் வேண்டுதலுக்கு இசைந்து, பகவான் கிருஷ்ணன் நரகாசுரனை வதைத்த நாளான ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சத்து சதுர்தசி இரவு தீபாவளியாக கொண்டாடப்படும் என்று அனுக்ரஹித்தார்.

kr

கலி யுகம்

தீபாவளி அன்று ஸத்வ குணம் நிறைந்த விடியற்காலை பொழுதில் கங்கா ஸ்நானம் முடித்தல்… கங்கை என்பவள் பாபத்தை போக்குபவள்…எங்கோ இருக்கும் கங்கையில் நம்மால் நீராட முடியுமா?

முடியும்! பெரியாழ்வாரின் ஒரு பத்து பாசுரங்கள் தெரிந்தால்… அகத்தில் ஸ்நானம் முடித்தாலே கங்கையில் நீராடியதற்கு சமம் என்று கணக்கு…

புத்தாடை புனைந்து, பட்டாசுகள் வெடித்து, விளக்கேற்றி, பக்ஷணங்கள் பெருமாளுக்கு ஆராதித்து பிரசாதத்தை எடுத்து கொள்ளுதல்…

பெரியோர்களை தேடிச்சென்று ஆசீர்வாதம் வாங்குதல் பெரும் பேறு…

ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்து… பெரியோர்கள் பாதங்களை பணிகிறேன்…

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சர்வம் கிருஷ்ணார்பனம்

Leave a comment