34. சிருஷ்டி & பிரளயம்

ஸத்யலோகத்தில் பிரம்மன் நேற்றைய தினம் ஐம்பது வயதை கடந்திருந்தார். தற்பொழுது அங்கே மணி துல்லியமாக 11.40 AM, கலி முடியும் வரை 11.40 AM தான்.

அது எப்படி சாத்தியம் , ஸத்ய லோகம் நின்று விட்டதா என நினைப்போர் அடியேனது கால விடயத்தை பார்க்குமாறு பிரார்திக்கிறேன்.

பூலோகத்தில் ஒரு சதுர்யுகம் (43,20,000 years) = ஸத்யலோகத்தில் 43.2 Seconds.

கீழே காண்பது ஒரு பிரம்மாண்டம், அதில் பூலோக மண்டலத்தின் மத்தியில் உள்ள பூமியில், ஜம்பு துவீபத்தில், பாரத வர்ஷத்தில் நாம் வசிக்கின்றோம்.

ஒவ்வொரு லோகத்தின்/ துவீபத்தின்/ ஆவரணத்தின் அளவோ , தூரமோ & உயரமோ மேலே குறிப்பிடவில்லை. அதே போல் மேரு மலை மற்றும் இதர கூறுகளையும் தவிர்த்துள்ளேன் வாசகர்கள் எளிதாக புரிந்து கொள்வதற்காக. அதனை இன்னொரு பதிவில் விளக்க முயல்கிறேன்.

இப்படி கோடானகோடி பிரம்மாண்டங்களை உள்ளடக்கியது லீலாவிபூதி. ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் அதீத புண்ணிய கர்மங்கள் கொண்ட ஆத்மாக்கள் பிரம்மன், ருத்ரன், இந்திரன் மற்றும் ஏனைய பதவிகளை பெறுகின்றனர்.

லீலாவிபூதியை போல் மூன்று பங்கு பெரியது நித்யவிபூதி (ஸ்ரீவைகுண்டம்), இரண்டிற்கும் இடையில் விரஜா நதி.

சிருஷ்டியும் பிரளயமும் லீலாவிபூதிக்கே, அதனை அறியவே இப்பதிவு.

பிரளயம் நான்கு வகை, அதில் நித்யம் & ஆத்யந்திகம் ஆத்ம சம்மந்தம் பெற்றது.

  • நித்யம் = பிறப்பு, இறப்பு & மீண்டும் (ஒரே ஆத்மா வெவ்வேறு உடல்களை தரிப்பது).
  • ஆத்தியந்திகம் = ஆத்மா முக்தி அடைவது.
  • நைமித்திகம் = பிரம்மாக்களின் ஒரு பகல் பொழுது முடிந்ததும், கீழ் லோகங்கள் முதல் மூன்று மேல் லோகங்கள் வரை அழிவு பெரும். 43,20,00,00,000 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு.
  • பிராகிருதம் = நடப்பு பிரம்மாக்களின் ஆயுள் முடிந்ததும் லீலாவிபூதி அழிவு பெரும். 3,11,04,00,00,00,00,000 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வு.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைக்கேற்ப பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சிரஞ்சீவியான மஹரிஷி மார்கண்டேயரிடம் ஆசிபெற்று சத்விஷயங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது பிரளயத்தை நேரில் கண்ட அனுபவத்தை மார்கண்டேயரை பகிர கோரினர்.

நைமித்திக பிரளயம் முடிந்து சிருஷ்டி தொடங்குவதற்கு முந்தைய நிலை:

மஹர்லோகத்தில் இருந்து கீழ் லோகங்கள் என்னவாகின என காண்கையில், ஆலிலையின் மேல் ஓர் குழந்தை சமுத்திரத்தில் மிதந்து வந்ததை நம்ப இயலா ஆச்சர்யத்துடன் கண்டோம்.

அக்குழந்தையின் கண்களில் கண்ட ஒளி எங்களை நிலை கொலைய செய்தது, எங்களை கண்ட குழந்தை தன் ஒளியை குறைத்து புன்சிரிப்பை தருவித்தது. அக்குழந்தை வேறு யாரும் அல்ல தருமரே, பரந்தாமனான உங்கள் வாசுதேவரே.

ஆலிலை கண்ணன்

ஸுவர்லோகம் உட்பட கீழ் லோகங்கள் அனைத்தும் மூழ்கியிருந்தன நீருக்கடியில். என்னை போன்ற சிறந்த தபஸ்விகள் மேல் லோகங்களான மஹர்லோகம் & ஜனலோகத்திற்கு குடி பெயர்ந்துவிட்டோம் பிரளயத்தின் சமிங்கை கிடைத்ததும்.

பிரம்மாவின் பகல் முடிந்து முன்னிரவு வரை: ஸுவர்லோகம் தொடங்கி பாதாளம் வரை சூரியன் தகிக்க தொடங்கினான், எத்தனை எத்தனை ஆண்டுகள், ஆதலால் இவ்வனைத்து லோகங்கலும் ஆமை ஓடு போல் கருகியது. நீர் வற்றி அனைத்தும் மாண்டன.

பிரம்மாவின் முன்னிரவு முடிந்து பின்னிரவு வரை: மீதி ஏதும் இருப்பின் மழை அனைத்து லோகங்களையும் வெள்ளக்காடாக்கி உட்கொண்டது.

பிரம்மாவின் பின்னிரவு முடிந்து நள்ளிரவு வரை: மழை நின்று புயல் அனைத்து லோகங்களையும் சூழற்றி அடித்தது.

பிரம்மாவின் நள்ளிரவுக்கு பின் பொழுது புலரும் வரை: பேரமைதி. அனைத்து லோகங்கலும் நீருக்குள் அமிழ்ந்திருக்க, இத்தருணத்தில் தான் ஆலிலையில் கண்ணன் சமுத்திர பிரவாகத்தின் மேல் பவனி கொண்டிருந்தான். நைமித்திக பிரளயம் நன்றாக முடிவுற்றதா, சிருஷ்டியை தொடங்கலாமா என பார்வையிட்டான்.

சிருஷ்டி தொடரும்.

Leave a comment