30. பிறவிகள்

ஸ்ரீமத் பாகவதம்: ஆத்மாவானது 84,00,000 வகையில் பிறவிகள் எடுக்கலாம்.

  • 4,00,000 மனித இனங்கள்
  • 9,00,000 இனங்கள் தண்ணீரில் வாழ்பவை
  • 10,00,000 வகையான பறவைகள்
  • 11,00,000 இனங்கள் பூச்சிகள் மற்றும் ஊர்வன
  • 20,00,000 மரங்கள் மற்றும் தாவரங்கள்
  • 30,00,000 வகையான மிருகங்கள்

இதில் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது. 

அரிய பிறவியான மானிடராய் பிறந்தால் மட்டுமே பிறவியருக்க முடியும், இதனை மனதில் கொள்ளாமல் பாவங்களை சேர்த்தால் மானிட பிறவியும் அரிதாகி போகும்.

விஷ்ணு ஸ்மிருதி: மானிட பாபங்களுக்கு எற்றால் போல் நரக வாசம், பின்பு பூலோகத்தில் மானுடரில்லா பிறவிகள்.

  • மிக உயர்ந்த அளவிலான பாவங்களை சேர்த்தவர்கள் அனைத்து வகை தாவரங்களாக அடுத்தடுத்து பிறப்பார்கள்.
  • கொலை செயல் புரிந்தவர்கள் புழுக்கள் (அ) பூச்சிகளாக பிறப்பார்கள்.
  • கொடிய பாவங்களை சேர்த்தவர்கள் நீர்வாழ் விலங்குகளாக பிறப்பார்கள்.
  • குறைந்த பாவங்களை சேர்த்தவர்கள் பறவைகளாக பிறப்பார்கள்.
  • வர்ணாசிரம தர்மத்தை மீறியவர்கள் நீர் மற்றும் நில வாழ் உயிரினங்களாக பிறப்பார்கள்.
  • சாதி கலப்பு செய்தவர்கள் மான்களாக பிறப்பார்கள்.
  • பிக்ஷை எடுப்பவர்களை அவமதித்தவர்கள் கால்நடைகளாக பிறப்பார்கள்.
  • தூய்மைக்கு கேடு விளைவிப்பவர்கள் சண்டாளர்களாக பிறப்பார்கள்.
  • இதர குற்றங்கள் புரிந்தவர்கள் காட்டு விளங்குகளாக பிறப்பார்கள்.
  • அடுத்தவரின் உணவை உண்டவர் புழுக்கள் (அ) பூச்சிகளாக பிறப்பார்கள்.
  • திருட்டு தொழில் (தங்கத்தை தவிர்த்து) புரிந்தவர்கள் ராஜாளிகளாக பிறப்பார்கள்.
  • பரந்த பாதையை மூடியவர்கள் பொந்துகளில் வாழும் பாம்புகளாக பிறப்பார்கள்.
  • தானியத்தை திருடியவர் எலிகளாக பிறப்பார்கள்.
  • செம்பைத் திருடியவர் அன்ன பட்சிகளாக பிறப்பார்கள்.
  • தண்ணீரைத் திருடியவர் நீர் பறவைகளாக பிறப்பார்கள்.
  • தேனை திருடியவர் காட்டு ஈக்களாக பிறப்பார்கள்.
  • பால் திருடியவர் காகங்களாக பிறப்பார்கள்.
  • பழச்சாறுகள் திருடியவர் நாய்களாக பிறப்பார்கள்.
  • வெண்ணெய் திருடியவர் மங்கூஸ்களாக பிறப்பார்கள்.
  • மாமிசம் திருடியவர் பருந்துகளாக பிறப்பார்கள்.
  • கொழுப்பு திருடியவர் நீர்க்காக்கைகளாக பிறப்பார்கள்.
  • எண்ணெய் திருடியவர் கரப்பான்களாக பிறப்பார்கள்.
  • உப்பை திருடியவர் சுவர் கோழிகளாக பிறப்பார்கள்.
  • பட்டு திருடியவர் கௌதாரிகளாக பிறப்பார்கள்.
  • கைத்தறி திருடியவர் தவளைகளாக பிறப்பார்கள்.
  • பருத்தி திருடியவர் சுருள் பறவைகளாக பிறப்பார்கள்.
  • பசுவை திருடியவர் உடும்புகளாக பிறப்பார்கள்.
  • சர்க்கரை திருடியவர் வெளவால்களாக பிறப்பார்கள்.
  • திரவியங்கள் திருடியவர் கஸ்தூரி எலிகளாக பிறப்பார்கள்.
  • காய்கறிகள் திருடியவர் மயில்களாக பிறப்பார்கள்.
  • தானியங்கள் திருடியவர் பன்றிகளாக/ முள்ளம்பன்றிகளாக பிறப்பார்கள்.
  • தீயை திருடியவர் நீண்ட கழுத்து பறவைகளாக பிறப்பார்கள்.
  • பாத்திரங்களை திருடியவர் குளவிகளாக பிறப்பார்கள்.
  • சாயத்தை திருடியவர் கௌதாரிகளாக பிறப்பார்கள்.
  • யானையை திருடியவர் ஆமைகளாக பிறப்பார்கள்.
  • பழங்களை திருடியவர் குரங்குகளாக பிறப்பார்கள்.
  • பெண்களை களவாடியவர்  கரடிகளாக பிறப்பார்கள்.
  • வாகனங்களை திருடியவர் ஒட்டகங்களாக பிறப்பார்கள்.
  • கால்நடைகளை திருடியவர் கழுகுகளாக பிறப்பார்கள்.

இப்படி பாவத்திற்கு ஏற்ப நரகத்தில் வேதனைக்கு ஆளாகி, பின் பூமியில் மேலே சொன்ன பிறவிகளை அடைந்து மீண்டும் மானிட பிறவி எடுக்கிறோம்.

இந்த பாவங்களை சேர்த்த ஆத்மாக்களின் மானிட பிறவிகளும் பாவ கர்மங்கள் குறையும் வரை நல்முறையில் அமையாது. 

தொடரும்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s