20. ஸ்ரீவைகுண்டம்

விரஜை நதியின் அக்கரையில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தை பற்றி சிந்திப்பவர்களுக்கான சிறு தீனி இது, யானை பசிக்கு சோளப்பொறி போல்.

ஸ்ரீவைகுண்ட லோகத்தின் தலை நகர் ஸ்ரீவைகுண்ட திவ்ய நகரம்.

திவ்ய நகரத்தின் நான்கு பக்கங்களிலும் உயரமான கோபுரங்கள் கொண்ட நுழைவாயில்கள் உள்ளன. இதன் பாதுகாவலர்கள்

சுமுகன், புண்டரீகன், குமுதாக்ஷன், சர்ப்ப நேத்திரன், பிரச்னிகர்பன், மனவன், வாமனன், சங்கர்காமன், குமுதன் & சுப்ரதிஷ்டிதன்

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் புறப்பாட்டுக்கு முன்பு வீதி உலா வரும் தசமூர்த்தி இவர்களே.

திவ்ய நகரத்தின் மையம் ஆயிரம் தூண்களை கொண்ட திருமாமணி மண்டபம்.
இதன் பாதுகாவலர்கள்:
சந்தன், பிரசந்தன், பத்ரன், சுபத்திரன், ஜெயன், விஜயன், தாத்ரா & விதாத்ரா

திருமாமணி மண்டபத்தின் மையப்புள்ளி அதிசுந்தர சிம்மாசனம். இதற்கு எட்டு கால்கள்.

முன் நான்கு கால்கள்: தர்மம், ஞானம், வைராக்கியம் & ஐஶ்வர்யம்

பின் நான்கு கால்கள்: அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம் & அனைஶ்வர்யம்

சிம்மாசனத்தின் மேல் ஆதிசேஷன் பர்யங்கம்.

இருபக்கமும் ஒன்பது அப்ஸரஸ்கள் வெண்சாமரம் வீச: விமலா, உதகர்ஷினி, ஞான, க்ரியா, யோகா, ப்ராவி,சத்யா, ஈசானா & அனுக்ரஹா.

சிம்மாசனத்தின் நடுநாயகமாக ஸ்ரீய:பதி ஸ்ரீமன் நாராயணன், வலப்பக்கம் ஸ்ரீதேவி, இடப்பக்கம் பூதேவி & நீளா தேவி.

எம்பெருமான் சிரசில் பிரகாசிக்கும் வைர கிரீடம். ஸ்ரீவத்ஸம், முத்து ஹாரம், கௌஸ்துபம், வைஜயந்தி (வனமாலை) அவரது திருமார்பை அலங்கரிக்க, பீதாம்பரமும் அதன் மேல் ஒட்டியானமும் அவரது இடையில் தவழ, பஞ்ச ஆயுதங்கள் திருக்கரங்களில் ஏந்தி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார்.

ஆசார்யர்கள் ஸ்ரீய:பதியின் முன் நேர்த்தியாக அமர்ந்திருப்பர். மற்ற திவ்ய மகிஷிகள் எம்பெருமானை சுற்றி இருப்பர்.

அனந்தன், கருடன் முதலான நித்யசூரிகள் சாம கானம் இசைப்பர்.

விஷ்வக்சேனர் , கஜாணனன், ஜெயத்சேனன் , ஹரிவக்த்ரன் & காலப்ரகிருதி எம்பெருமானுக்கு மரியாதை செலுத்துவர்.

வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே.

Leave a comment