27. ஆத்ம நிவாஸ்

நம் சித்தத்தில் சிறு சிந்தனையை விதைக்கவே இப்பதிவு.

பூலோகத்தில் சேர்த்த அபரிவிதமான பாப மூட்டை, ஆத்மாவின் முன் ஜென்மம் முடிந்ததும்  நரகத்துக்கு கொண்டுவந்துவிடும். பாபங்கள் அளவோடு இருந்திருந்தால் பூலோகத்திலேயே மறுபிறவி உண்டாகியிருக்கலாம்.

ஆத்மாவின் பாப மூட்டை அவிழ்க்கப்பட்டு அதற்கேற்ப தண்டனைகளை நிர்ணயித்து, எத்தனை காலம் என்ற அட்டவணை போடப்படும். ஆத்மா தாளமுடியா சித்ரவதைகளை அனுபவிப்பதற்காகவே யாதனா சரீரம் கொடுக்கப்படுகிறது.Ngஆத்மாவின் தண்டனை காலம் முடிந்ததும் யாதனா சரீரம் களையப்பட்டு, நரகத்திலிருந்து வெளியேற்றப்படும்.

ஆத்மா ஆகச்சிறந்த புண்ணியங்களை சேர்த்ததின் விளைவாக ஸ்வர்கத்தை அடையும் போது, உற்சாக வரவேற்பை பெறுகிறது. புண்ணியங்களுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான வருடங்கள் அங்கே வசிக்கும்.Indra_devaஸ்வர்கத்தில் ஆத்மா கால ஓட்டத்தை அறியாமல் மிகச்சிறந்த புலனின்பங்களில் மூழ்கும். புண்ணியம் முடியும் தருவாயில், அதற்கான அறிகுறியாக, ஆத்மா அணிந்திருக்கும் மலர் மாலையானது வாடத் துவங்குகிறது.

புண்ணியம் முழுவதும் தீர்ந்தவுடன் ஆத்மா ஸ்வர்கத்திலிருந்து வெளியேற்றப்படும்.

கோடான கோடி ஜீவ ஆத்மாக்கள் எண்ணற்ற மேக கூட்டங்கள் கொண்ட பஞ்ச பூதங்களில் முதன்மையான ஆகாசத்தை ஞானத்தால் நிறைக்கிறது. 

ஆத்மாக்கள் நரகத்திலோ அல்லது ஸ்வர்கத்திலோ அல்லது சந்திர மண்டலத்திலோ அல்லது பித்ரு லோகத்திலோ அல்லது பூ லோகத்திலோ அல்லது சித்தத்துக்கு எட்டாத இடங்களில் இருந்தோ ஆகாசத்தில் குடி பெயர வேண்டும்.aamஎத்தனை காலம் ஒவ்வொரு ஆத்மாவும் ஆகாசத்தில் வாசஸ்தலம் என்பதை அறிவது சாத்தியமன்று. ஆகாசத்தில் போக்குவரத்து அதிகம்.

வருணனிடம் மழை வேண்டி ஆத்மாக்களும் பிரார்திக்குமோ! மேக கூட்டங்கள் திரண்டதும், ஆத்மாக்கள் பூமியை நோக்கி படையெடுக்கும் மழைத்துளிகளின் வாயிலாகRainஆத்மாவின் அளவை பற்றி ஏற்கனவே அடியேனுடைய “இப்படிக்கு நான்” பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

நிலத்தில் விழும் ஆத்மாக்கள் தாவரங்கள், மரங்கள், ஜந்துக்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள் ஆகலாம். கடலில் விழும் ஆத்மாக்கள் கடல் உயிரினங்கள், தாவரங்கள் ஆகலாம்.

ஆத்மா எந்த தேசத்தில்/ இடத்தில் உண்டாகும் மழையில் விழ வேண்டும், யாரிடம், என்னவாக பிறப்பு என்பதை கர்மா முடிவு செய்யலாம்.

பலதில் சில கேள்விகள் கீழே:

  • எல்லா மழை துளிகளிலும் ஆத்மாக்கள் இருக்குமா?
  • ஒரு துளியில் எத்தனை ஆத்மாக்கள் இருக்கும்?
  • நிலத்தில்/ கடலில் விழும் ஆத்மாக்கள் அனைத்தும் பிறவி எடுக்குமா? அல்லது ஜடமாக கிடக்குமா?
  • எப்படி ஆத்மா தானியத்தில், தாவரத்தில், பழத்தில் புகுந்து உணவின் வாயிலாக ஆணிடம் செல்கிறது? 
  • வேறேந்த வழிகளில் ஆத்மாவின் பிறவி நிகழலாம்?

மனதில் கேள்விகள் நிறைய எழலாம், அனைத்துக்கும் பதில் ஒன்றே:

ஸ்ரீ மன் நாராயணன்

“வைகுண்டமே நித்யமான ஆத்ம நிவாசம்”vaikunt

Leave a comment