அத்தியாயம் 5 – திவ்யதேச படை
திவ்யதேச பயணத்துக்கான ஆயத்தம் நடந்தது…
ஆனால் ஆயத்தம் ஆனதோ நம்மாழ்வார் அல்ல…
பின்னர் வேறு யார்… சாட்சாத் ஸ்வாமி ஸ்ரீமன் நாராயணனே…
நம்மாழ்வாரின் பாசுரம் பருக அவ்வளவு அவா பரந்தாமனுக்கே…
ஒவ்வொரு திவ்யதேச பெருமாளும் படையெடுத்தனர் திருக்குருகூர் நோக்கி…
அப்படி ஓர் சமயம் பகவான் ஸ்ரீ ஆதிநாதன், நம்மாழ்வார் பாசுரம் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து வகுல (மகிழம்பூ) மாலை அணிவித்தார்…
அன்றிலிருந்து “வகுலாபரணர்” என்கிற திருநாமம் ஏற்பட்டது…
நம்மாழ்வாருக்கு “திருக்குருகை பிரான்” என்கிற மற்றொரு திருநாமமும் உண்டு…
இப்படியே நம்மாழ்வார் புளிய மரத்தின் கீழ் அமர்ந்தே பகவான் ஸ்ரீமன் நாராயணனின் திவ்ய தேச ஸ்வரூபம் ஒவ்வொன்றையும் கண்டு மோகித்தார்…
ஸ்ரீ மதுரகவியும், குரு உடன் இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்து வந்தார்…
{ ஓர் சிறு குறிப்பு: ஸ்ரீ மதுரகவி, நம்மாழ்வாரை விட வயதில் மிக மூத்தவர்…
அவர் த்வாபர யுகத்தின் இறுதியில் அவதரித்ததாய் அறியப்படுகிறது… }
அப்படி ஓர் நாள், நம்மாழ்வாரை காண வந்தார் இந்த பெருமாள்…
தொடரும்…