அத்தியாயம் 8 – நம்மாழ்வார் திருவடி தொழல்
கிருஷ்ண பக்தியின் இலக்கணமாக திகழ்ந்த ஸ்வாமி நம்மாழ்வார்… தனது 32வது வயதில் வைகுண்டநாதன் திருவடி சேர்கிறார்…
{ முதல் 16 ஆண்டுகள் தவம்… அடுத்த 16 ஆண்டுகள் ஆச்சர்யமான தமிழ் பாசுரம்கள்… நமக்கும் தமிழுக்கும் கிடைத்த மிக பெரிய கொடை ஸ்வாமி நம்மாழ்வார்… }
இன்றளவும் பெரிய பெருமாளின் ஆக்யைப்படி… ஒவ்வொரு ஆண்டும் பெரிய திருநாளின் இரா பத்து பத்தாம் நாள் உற்சவமாக நம்மாழ்வார் மோக்க்ஷம் நடைபெறுகிறது…
பத்தாம் திருநாள்… பத்தாம் பத்தின் இறுதி… அரையர் ஸ்வாமி விண்ணப்பிக்க…
அவாவறச் சூழ் * அரியை அயனை அரனை அலற்றி
அவாவற்று வீடுபெற்ற * குருகூர்ச் சடேகாபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் * இவையாயிரமும் * முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் * பிறந்தார் உயர்ந்தே
நம்மாழ்வார் பெருமாள் திருவடி தொழுதல்…
இச்சமயம் பெருமாள் திருவடி படர்ந்த… நம்மாழ்வாரை சூழ்ந்த அத்துழாய் பிரசாதமாக கிடைத்தல் புண்ணியம்…
நம்மாழ்வார் மோக்க்ஷத்தின் மற்றுமொரு ஏற்றம்… பெருமாள் கஸ்தூரி திலகம் அகற்றி தன் முழு முக தேஜஸை நம்மாழ்வாருக்கு காண்பித்து அருளுதல்…
பெரிய திருநாள் நிகழ்ச்சி திருவரங்கத்தில் தொடங்கி மற்ற திவ்ய தேசங்களிலும் பின்பற்றப்பட்டு கொண்டாட படுகிறது..
{ பெரிய திருநாளின் காரண கர்த்தா திருமங்கை மன்னன் “கலியன்”…
அது ஒரு தனி கதை… பின்னர் ஒரு சமயம் திருமங்கை மன்னன் ஆசியுடன் விரிவாக பார்ப்போம்… }
தாமிரபரணி நீரை கொண்டு உருவாகிய… மதுரகவியால் ஆராதிக்கப்பட்ட நம்மாழ்வார் விக்ரஹம் ஆழ்வார் திருநகரியில்…
அப்படியென்றால் திருவரங்கத்தில் சேவை சாதிக்கும் நம்மாழ்வார் …
தொடரும்…