12. சந்தியாவந்தனம்

  1. உபநயனம் ஆன அனைவரும் நித்யம் செய்ய வேண்டிய க்ரமம்.
  2. சந்தியாவந்தனம் என்பது தேகம், ஆத்மா ஆகிய இரண்டுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய செயல்.
  3. சந்தியாவந்தனம் செய்வதனால் புண்ணியமோ பலனோ கிடையாது, செய்யாவிட்டால் கண்டிப்பாக பாவம் கிட்டும்.
  4. சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று வேளைகளில் செய்தல் வேண்டும்.
  5. இரவும் பகலும் சந்திக்கும் விடியற்காலை பொழுதில் சூரியோதயத்துக்கு முன் ப்ராத சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் (காலை மணி 5.00 முதல் 5.45 வரை).
  6. சூரியன் உச்சி வானில் இருக்கும் பொழுதில் மாத்யானிகம் செய்தல் வேண்டும் (மதியம் 12.00 முதல் 12.30 வரை).
  7. பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு சாயம் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்).6923347764_d9bf300efe_z
  8. நாம் செய்யும் சந்தியாவந்தனம் அர்க்யம், ஜபம் வலிமையில் தான் சூரியனின் தேர் தங்கு தடையின்றி ஓட வேண்டும் என நாராயணன் பணித்துள்ளான். ஆகையால் இயற்கையை உய்ய வைத்து நாமும் உய்வோமே.
  9. தினமும் நீராடி தேகத்தை தூய்மை செய்து கொள்கிறோம் ஆனால் மனதிற்கு?அதற்கு தான் ஆசமனம். அச்சுத, அனந்த, கோவிந்த என்று துவாதச திருநாமங்களை கூறி தீர்த்தத்தை பருகும் போது மனதும் வாக்கும் தூய்மை அடைகிறது.
  10. ஆத்ம சக்தி நன்றாக இயங்க வேண்டும் என்றால் பிராண வாயு அதிகரித்து இருக்க வேண்டும். அதற்கு தான் பிராணாயாமம் என்கிற மூச்சு பயிற்சி. நாம் அவசர கதியில் மூச்சை இழுத்து விடுகிறோம் (சராசரியாக 16 முறை ஒரு நிமிடத்திற்கு). இதுவே பிராணாயாமம் தினமும் செய்து வர இந்த எண்ணிக்கை குறையும். எண்ணிக்கை குறைய பிராண வாயு நம் உடலில் அதிகரிக்கும், ஆத்ம சக்தி பலம் பெரும்.
  11. அநேகம் பேர் இந்த வாக்கியத்தை அன்றாட வாழ்க்கையில் பயன் படுத்திருப்போம். நம் தலையில் இவ்வளவு நாள் தான் என்று பிரம்மன் எழுதிருக்கார், அது முடிந்து போயிற்று என்றால் கிளம்ப வேண்டியது தான் என்றுஇது தவறான புரிதல்.
  12. பிரம்மன் நாள் கணக்கெல்லாம் குறிப்பதில்லை இன்னும் துல்லியமாக சுவாச கணக்கு வைத்துள்ளார். ஒரு ஆத்மா இந்த ஜென்மத்தில் இவ்வளவு முறை சுவாசித்த உடன் கதை முடியட்டும் என்பது எம தர்மராஜனுக்கு இடப்பட்ட ஆணை.
  13. எவ்வளவு சீக்கிரம் மூச்சை இழுத்து விட்டு கணக்கை முடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்ப வேண்டியது தான். சுவாசத்தை கட்டுக்குள் வைக்க தெரிந்த மகான்கள் மட்டுமே அதிக நாள் ஜீவித்துள்ளனர்.
  14. ஓம் என்கிற பிரணவம் ஸ்ரீமன் நாராயணனை குறிக்கும் அதோட சேர்த்து பூ:பூவ:சுவ:மஹ:ஜன:தப:சத்யம் என்று ஏழு லோகங்களுக்கும் தலைவன் என அவரை தியானித்து பிராணாயாமம் செய்யும் பொழுது ஆத்ம ஆரோக்கியம்.
  15. காயத்ரி மந்திரத்தின் அர்த்தம் மற்றும் சிறப்பை தனியாக இன்னோர் சமயம் பதிவிடுகிறேன். அவ்வுளவு விஷயம் உண்டு.
  16. அலுவல், படிப்பு, சம்சார பலுவால் மூன்று வேளை செய்வது சாத்தியமா? ஒரு பொழுது செய்வதே கடினம் தான், ஆனால் சிரத்தை உள்ளவர்கள் எப்படியும் செய்து விடுவர். ஏன் நமது தகப்பனாரோ, பாட்டனாரோ செய்து நாம் பார்த்ததில்லை?
  17. சாஸ்திரமும் நம்மிடம் அவ்வுளவு கண்டிப்புடன் இருப்பதாக தெரியவில்லை. மாத்யானிகம் மதியம் செய்ய முடியாதா? காலையில் சூரியன் உதித்ததும் செய்து விடலாம். சந்தியாவந்தனத்துக்கு நேரம் தவறி போயிற்றா பிராயசித்தமாக அர்க்யம், பிராணாயாமம் சேர்த்து செய்தால் போதும்.
  18. காலையில் சந்தியாவந்தனம் பண்ணும் போது முதல் நாள் இரவில் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கோரி பிரார்த்திக்கிறோம், மாலையில் செய்யும் போது அன்றைய பகல் பொழுதில் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கோரி பிரார்த்திக்கிறோம்.
  19. பாவத்துக்கு எப்போது மன்னிப்பு கோருகிறோம் என்று யோசிக்கிறீர்களா? காமோகார்ஷீத் ஜபம்.

காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா

புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்பயாமி

Advertisement

2 thoughts on “12. சந்தியாவந்தனம்”

  1. no words can ever appreciate your briefing on the sandhyavandhanam. excellent brief, thanks, D.Suresh,

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s