பிரளய காலத்தில் கீழ் லோகங்கள் மூழ்கி அனைத்தும் மடிந்தன என்பதன் பொருள் “சரீரங்கள் விடுபட்டன“. ஆத்மாக்கள் ஆலிலை கண்ணனோடு ஐக்கியமானது. ஆனால் பிரம்மத்தோடு இருக்கின்றோம் என அறியாமல் ஆத்மா அவ்யக்தம் ஆகியிருக்கும்.
இந்த நான்கும் அனாதி (ஆதியும் அந்தமும் அற்றவை) – பிரம்மம், வேதம், ஆத்மா & கர்மா.
பிரம்மனுக்கு பொழுது புலர்ந்ததும், நைமித்திக சிருஷ்டியின் தொடக்கம்: நீரில் வாழும் உயிரினங்கள் தோன்றும், பின் வாயுவின் துணை கொண்டு நீர் ஒதுங்கி மலையும் , மரமும், நிலமும் உண்டாகும், மற்ற உயிரினங்கள் , பிராணிகள் , மனிதர்கள் தோன்றுவர், அனைத்தும் கர்ம வினைப்படி அரங்கேறும்.
சரி! பிரம்மாண்டங்கள் கொண்ட லீலாவிபூதியின் அழிவு எப்படியதாக இருக்கும்? காண்போம் பிராகிருத பிரளயத்தில், அநேகமாக கீழே உள்ள படம் போல் இருக்கலாம்.

பிராகிருத பிரளயத்தை அறிய பிராகிருத சிருஷ்டி தெரிந்திருக்க வேண்டும். கோடானகோடி பிரம்மாண்டங்களை கொண்ட லீலாவிபூதி கீழே பதிவிட்டுள்ளது போலவே சிருஷ்டிக்க படுகின்றது (Source: Vishnu Puranam).
லீலாவிபூதி தத்துவங்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் இந்திரியங்கள் கொண்டு உருப்பெறுகிறது.
- பகவான் சங்கல்பத்தால் சிருஷ்டி
- மூல பிரகிருதி எனும் கருவை விதைக்கிறார்
- அதிலிருந்து மஹத் எனும் ஞானம் எழும்புகிறது
- அதிலிருந்து அஹங்காரம் (Not Ego) எனும் குணம் பிறக்கின்றது
- இது சாத்விக , ராஜஸ & தாமஸ என்று மூன்றாக விரிவடைகிறது
- ராஜஸ & தாமஸ கலந்து பஞ்ச பூதங்கள் உண்டாகிறது (இவ்வரிசையில் ஆகாசம் , காற்று, நெருப்பு, நீர் & நிலம்)
- பஞ்ச பூதங்கள் கலப்பால் லோகங்களும், சரீரங்களும் பிறக்கின்றன
- சாத்விக & ராஜஸ கலந்து 10 இந்திரியங்கள் (கர்மா & ஞான) மற்றும் அதன் தலைவனான மனசு உருவாகிறது
மேலே தொகுக்கப்பட்ட நிலைக்கு பெயர் சமஷ்டி சிருஷ்டி, அனைத்தும் தயாராகி தனி தனியே இருக்கும் இயங்கா நிலை. அனைத்தையும் கலந்து செய்லபட வைக்கும் நிலைக்கு பெயர் வியஷ்டி சிருஷ்டி.
பிராகிருத சிருஷ்டியின் தொடக்கம்:
வியஷ்டி சிருஷ்டிக்கு பின் அண்டங்கள் பிறக்கும் , லீலாவிபூதி பெருக்கும்.
நீரில் வாழும் உயிரினங்கள் தோன்றும், பின் வாயுவின் துணை கொண்டு நீர் ஒதுங்கி மலையும் , மரமும், நிலமும் உண்டாகும், மற்ற உயிரினங்கள் , பிராணிகள் , மனிதர்கள் தோன்றுவர், அனைத்தும் கர்ம வினைப்படி அரங்கேறும்.
பிராகிருத பிரளயம்: நைமித்திக பிரளயம் போலவே 14 லோகங்களும் அழியும், பின் ஒரு தத்துவத்துக்குள் இன்னொன்று லயிக்கும் அதனுள் இன்னொன்று லயிக்கும், இப்படியே அனைத்தும் பிரம்மத்திடம் லயிக்கும்.
இங்கே ஒரு தத்துவத்தை அடியேன் குறிப்பிடவில்லை, அது சிருஷ்டியிலும் இருக்கும் பிரளயத்திலும் இருக்கும் , அழிவும் கிடையாது. Comments-ல் தெரியப்படுத்தவும்.
ஸர்வம் கிருஷ்ண லயம்