அத்தியாயம் 7 – பவிஷ்யதாச்சார்யன்
பவிஷ்யதாச்சார்யர் விக்ரஹ ஸ்வரூபமாக காட்சியளித்தார்…
{ இந்த விக்ரஹத்தை ஆழ்வார் திருநகரிக்கு அருகில் ராமானுஜ சதுர்வேதி மங்கலம் எம்பெருமானார் சந்நிதியில் சேவிக்கலாம்…
விக்ரஹத்துக்கு ஒரு தனி சிறப்பு: வெள்ளை வேஷ்டி சாத்தப்படுகிறது }
மதுரகவி வினவியபோது…
இனி வரும் காலங்களில்… இவர் தான் ஜகத்துக்கே ஆசார்யராக திகழ போகிறார் என்று நம்மாழ்வார் கூறினார்…
நம்மாழ்வார் காலத்தில் அவர் பிறந்து இருக்கவில்லை…
பல நூற்றாண்டுக்கு பின் இளையாழ்வான் எனும் இயற்பெயர் கொண்டு அவதரித்து…
ராமானுஜன் எனும் திருநாமத்தொடு எல்லா ஜீவாத்மாக்களையும் ஆட்கொண்டு உய்ய வழி காண்பித்தவர்…
ராமானுஜன் சம்பந்தம் உடையவருக்கு மோக்க்ஷம் தந்தோம் என பகவானே அநுக்ரஹித்துள்ளார்…
{ இன்றளவும் ராமானுஜர் அமைத்த 74 சிம்மாசினாதிபதிகள் நமக்கு ஆசார்யர்களாக இருந்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து ராமானுஜருடன் சம்பந்தம் ஏற்படுத்தி மோக்க்ஷத்துக்கான வழி காண்பிக்கின்றனர்…
பஞ்ச சம்ஸ்காரம்: 1 சமாஷ்ரயணம் 2 உர்த்வ புண்றம் 3 தாஸ்ய நாமம் 4 திருமந்திரம், துவயம் & சரம ஸ்லோகம் 5 திருவாராதனம்
ராமானுஜருக்கு முன் பிறந்த எல்லாருக்கும் அவர் திருமுடி சம்பந்தம்…
ராமானுஜருக்கு பின் பிறந்த எல்லாருக்கும் அவர் திருவடி சம்பந்தம்…}
இதை கேட்டு ஆனந்தித்த மதுரகவியிடம் நம்மாழ்வார் மீண்டும் நீரை காய்ச்ச சொன்னார்…
நம்மாழ்வார் விக்ரஹமும் வந்தது… இனி…
தொடரும்…