அத்தியாயம் 6 – பெரிய பெருமாள்
நம்மாழ்வரை காண வந்தவர்… பூலோக வைகுண்ட நாயகனான பெரிய பெருமாள்…
நம்மாழ்வார் பெருமாளை கண் பனிந்து மனமுறுகி திருவாய்மொழிந்தார்…
உயர்வற உயர் நலம்* உடையவன் யவன் அவன்
மயர்வற மதி நலம்* அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள்* அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி* தொழுதெழென் மனனே!
திருவரங்கநாதன் அவாவோ நம்மாழ்வார் உபதேசம் மூலம் லோகத்தை திருத்தி நற்கதிக்கு கொண்டு வருவது…
ஆனால் நம்மாழ்வாரோ உபதேசத்தை தவிர்த்து பெருமாளின் கல்யாண குணங்களை அனுபவித்து உருகினார்…யாசித்தார் மோக்க்ஷத்தை…
பெருமாளும் திவ்ய பிரபந்தங்களை காது குளிர கேட்டு மிக விரைவில் என்னை வந்து சேர்வாயாக என பணித்தார்…
இதை அறிந்த மதுரகவிக்கு ஒரு பக்கம் ஆனந்தம் மறு பக்கம் துயரம்…
மதுரகவிக்கு நம்மாழ்வாரே நாராயணன்…
குருவை பிரிய மனமில்லாமல் துயருற்றார்…சீடன் துயர் அறிந்த குரு…
மதுரகவியை அழைத்து தாமிரபரணி நீரை கொண்டு வந்து காய்ச்சினால் ஒரு விக்ரஹம் வரும்…
நாமாக நினைத்து கொண்டு வைத்திரும் என ஆணை…
மதுரகவியும் ஓடினார்… நீர் எடுத்தார்… காய்ச்சினார்…
விக்ரஹமும் வளர்ந்தது… மதுரகவிக்கு அதிர்ச்சி கலந்த வியப்பு…
காரணம் வந்திருந்த விக்ரஹம் நம்மாழ்வாராக இருக்கவில்லை…
மதுரகவி யாசித்ததோ நம்மாழ்வார் விக்ரஹம்…ஆனால் வந்ததோ வேறொரு விக்ரஹம்…
மதுரகவிக்கு விக்ரஹம் யாரென அப்பொழுது தெரியவில்லை…
அந்த விக்ரஹம்…
தொடரும்…