அத்தியாயம் 4 – வேதம் தமிழ் செய்த மாறன்
நம்மாழ்வார் நான்கு வேதம்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினார்… இதனால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என அழைக்கப்பட்டார்…
நம்மாழ்வார் கீழ்வரும் 1296 பாசுரங்களை இயற்றினார்…
திருவிருத்தம் – 1௦௦ பாசுரங்கள், ரிக் வேதத்தின் சாரம்
திருவாசிரியம் – 7 பாசுரங்கள், யஜுர் வேதத்தின் சாரம்
பெரிய திருவந்தாதி – 87 பாசுரங்கள், அதர்வண வேதத்தின் சாரம்
திருவாய்மொழி – 11௦2 பாசுரங்கள், சாம வேதத்தின் சாரம்
இதுதான் தமிழுக்கான நான்கு வேதங்கள்… இந்த நான்கில், ஸ்ரீ ரங்கநாதரை மையமாய் கொண்ட திருவாய்மொழியே தலைசிறந்ததாக கருதப்படுகிறது…
நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், நாலாவது ஆயிரம் மற்றும் முன்றாவது ஆயிரத்தின் பிற்பகுதி மேலே குறிப்பிட்டவை ஆகும்…
திருக்குருகூரில், நம்மாழ்வார் பாடிய 36 திவ்ய தேசங்களை இன்றளவும் புளிய மரத்தின் அருகில் சுவரோவியமாக காண முடியும்…
உறங்காபுளி, திருக்குருகூர்
நம்மாழ்வார் திவ்ய தேச விஜயம் பற்றி…
தொடரும்…