அத்தியாயம் 2 – மாறனின் தவம்
த்வாபர யுகம் முடிவுற்றது…
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டத்திற்கு எழுந்தருளி 43 நாட்கள் ஆகியிருந்தன…
கி.மு.3102 – கலி யுகம் ஆரம்பம்…
தாமிரபரணி நதிக்கரை…திருக்குருகூர்…
பிரமாதி ஆண்டு, வைகாசி மாதம் (மே – ஜூன்), பவுர்ணமி நாள், விசாக நட்சத்திரம்…
காரி – உதயநங்கை தம்பதிகளுக்கு திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாய் பிறந்தார் கலி யுகத்தின் முதல் ஆசார்யர்…
அவரது திருநாமம் “மாறன்”…
அவர் பிறந்த போது மனித இயல்பில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக காணப்பட்டார்… கண்கள் திறக்கவில்லை அல்லது சாப்பிட தனது வாயை அவர் திறக்கவில்லை… அழவில்லை ஒருபோதும்…
மன உளைச்சலில் பெற்றோர்கள் குழந்தையை திருக்குருகூர் கோயிலுக்கு எடுத்துச்சென்று ஸ்ரீமன் நாராயணனிடம் சரணடைந்தனர்…
குழந்தை ஆண்டுகளில் வளர்ந்தது ஆனால் எந்த ஒரு மாற்றமும் தென்படவில்லை…
மாறாக மாறன் கோயிலிலுள்ள புளிய மரத்தின் கீழ் தாமரை நிலையில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார்… அவர் எந்த ஓரு வெளி தூண்டுதல்களுக்கும் செவி மடுக்கவில்லை…
ஓரு பொழுதும் ஸ்ரீ கிருஷ்ணரை தவிர மற்றொன்றை நினையேன் என்று பிற உணர்வுகளை கட்டுக்குள் வைத்ததால் “பராங்குச” என்றும் அறியப்பட்டார்…
16 ஆண்டுகள் கடும் தவம்…பிறந்ததிலிருந்து இதே நிலை…
ஓரு குழந்தை பிறக்கும்போது அதன் கடந்த பிறவிகளின் உணர்வு, தற்போதைய இருப்பு மற்றும் எதிர்கால விதி உருவாகிறது…
“சடம்” எனும் மேலே குறிப்பிட்ட வாயுவை தன் தவ கோபத்தின் வலிமையால் வெளியேற்றினார் மாறன்…இதனால் “சடகோபன்” (அ) “சடாரி” (அ) “சடவைரி” (அ) “சடஜித்” என்றும் நாமகரணம் ஏற்பட்டது…
குறிப்பு: மாறன் எப்படி மற்றவைகளை தவிர்த்து, ஸ்ரீமன் நாராயணனே எல்லாம் என்று அவரிடம் சரணாகதி அடைந்து, சிரம் தாழ்ந்து பரம்பொருளின் திருவடிகளை தாங்குகிறாரோ… அது போலவே நம் எல்லாரும் கடைபிடிக்க வேண்டும் என்பதை குறிப்பதற்காகவே “சடாரி” சாதிக்கிறார்கள் வைணவ கோவில்களில்.
மாறனின் தவத்தை கலைக்க ஒருவர் வந்தார்… அவர்…
தொடரும்…