17. மாறனேரி நம்பி

பாகம் 4 – தனிமை

மாறனாகிய நம்மாழ்வாருக்கு ஒப்பாக கருதும் வகையில் திருவரங்கத்தில் உறையும் அரங்கன் மீது அளவற்ற பக்தி கொண்டமையால், மாறனுக்கு நேரான நம்பி எனும் பொருளில் மாறனேர் நம்பி (மாறன் + நேர் + நம்பி) அல்லது மாறனேரி நம்பி என அழைக்கப்பட்டார் பெரியவர்.

புராந்தக கோவிலில் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி நிர்வாகம் என குறிக்கும் விதமாக துவஜஸ்தம்பம் முன்னும் பலிபீடம் பின்னுமாக அமைய பெற்றிருந்தது (பாஞ்சராத்ர உதாரணம்: திருவரங்கம்).

வைகானஸ என்றால் பலிபீடம் முன்னும் துவஜஸ்தம்பம் பின்னுமாக இருக்கும் (வைகானஸ உதாரணம்: திருப்பதி).

ஆளவந்தார் பாஞ்சராத்ர ஆகம முறையை பரிந்துரைக்க, அதுவே பின்னர் ராமானுஜரால் அங்கீகரிக்க பட்டு பெரும்பாலான வைணவ கோவில்களிலும் வழி மொழியப்பட்டது.

ஆகார நியமத்தை கடைப்பிடித்த சிறிய திருமடப்பள்ளி, கோவிலை சுற்றி அழகிய நந்தவனம் என அனைத்தையும் நன்கு பராமரித்து வந்தார் அர்ச்சகர்.

2017-07-13-PHOTO-00002610

ஊர் சற்று தள்ளியே இருந்தது அதனால் பெரும்பாலான காலங்களில் மக்கள் வரவு வெகு சொற்பமே. அர்ச்சகரும் தன் பணிகளை முடித்து கொண்டு கிளம்பிவிடுவார்.

பெரியவரும் தனித்து விடப்பட்டு ஸ்ரீனிவாசரே கதி என்று கிடப்பார். கோவில் பிரசாதமே அவருக்கு உணவு.

கிராம மக்கள் அவரை ஒதுக்கிவிட்டார்களா, இல்லை அவர் மக்களை ஒதுக்கிவிட்டாரா தெரியாது. தனிமை சிறையில் வாழ்ந்தார், எல்லாம் பிணி வந்ததன் விளைவு.

வேங்கடவன், என்னை தவிர உனக்கு யார் சரியான துணை என்று ரட்சித்து கொண்டிருந்தார் பெரியவரை.

srinii

தனிமையை உணராதவராய் வேங்கடவன்? பல்லவ காலத்திற்கு முன், ஒருவர் தன்னை தரிசிக்க வரமாட்டாரா என்று வேங்கடத்தில் அவர் நின்ற காலமும் உண்டே.

தொடரும்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s