07. பிள்ளை லோகாசார்யர்

ரிஷிகளுக்கு ஏற்றம்

ஆத்ம  ஞானமற்றவர் மனிதர்கள்!
ஆத்ம  ஞானமுள்ளவர் ரிஷிகள்!

ஆழ்வார்களுக்கு ஏற்றம்

காய் கனியை உண்டு உய்ந்தனர் ரிஷிகள்!
கண்ணனே என உய்ந்தனர் ஆழ்வார்கள்!

பெரியாழ்வாருக்கு ஏற்றம்

மற்ற ஆழ்வார்கள் பெருமாளை சேவித்ததும் மோக்ஷத்தை வேண்டினர்!
பெரியாழ்வார் ஒருவரே  பெருமாளை சேவித்ததும் பல்லாண்டு பாடினார்!

மதுரகவியாழ்வாருக்கு ஏற்றம்

மற்ற ஆழ்வார்கள் பெருமாளை தெய்வமாக பற்றினர்!
மதுரகவியாழ்வார் ஒருவரே  ஆசார்யனை தெய்வமாக பற்றினார்!

ஆசார்யர்களுக்கு ஏற்றம்

தாங்களே கொண்டாடி மகிழ்ந்தனர் ஆழ்வார்கள்!
இன்னாரை கொண்டாட வைத்து மகிழ்ந்தனர் ஆசார்யர்கள்!

ராமானுஜருக்கு ஏற்றம்

தரம் பார்த்து பரிட்சித்து உபதேசித்தனர் மற்ற ஆசார்யர்கள்!
அவா உள்ளோருக்கு உபதேசித்தார் ராமானுஜர்!

பெரிய வாச்சான் பிள்ளைக்கு ஏற்றம்

வேதாந்தத்துக்கு வியாக்கியானம் இயற்றினார் ராமானுஜர்!
ஆழ்வார் பாசுரங்களுக்கு வியாக்கியானம் இயற்றினார் பெரிய வாச்சான் பிள்ளை!

பிள்ளை லோகாசார்யருக்கு ஏற்றம்

மேலே குறிப்பிட்ட எனையோரை காட்டிலும் பிள்ளை லோகாசார்யருக்கு ஏற்றம் யாதெனில் 18 ரஹஸ்ய கிரந்தங்கள் சாதித்தல்.

pl_goshti

  • ரஹஸ்ய த்ரயம் ஆன திருமந்திரம், த்வயம் & சரம ஸ்லோகத்திற்கு 8 கிரந்தங்கள்
  1. யாத்ருச்சிகப்படி
  2. ஸ்ரியப்பதிப்படி
  3. முமுக்ஷுப்படி
  4. பரந்தபடி
  5. தனி பிரணவம்
  6. தனி த்வயம்
  7. தனி சரமம்
  8. சாரா சங்க்ரகம்
  • தத்வ த்ரயம் ஆன சித், அசித், ஈச்வரனுக்கு 5 கிரந்தங்கள்
  1. தத்வ த்ரயம்
  2. அர்த்த பஞ்சகம்
  3. தத்வ சேகரம்
  4. பிரமேய சேகரம்
  5. அர்ச்சிராதி
  • ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு 5 கிரந்தங்கள்
  1. சம்சார சாம்ராஜ்யம்
  2. நவரத்ன மாலை
  3. நவவித சம்பந்தம்
  4. பிரபன்ன பரித்ராணம்
  5. ஸ்ரீ வசன பூஷணம்
கிரந்தங்கள் அரங்கேறிய இடம்

KA Singar entrance

“பிள்ளை லோகாசார்யர் வாழி திருநாமம்”
அத்திகிரி அருளாளன் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்து அவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளை பதம் நெஞ்சில்வைப்போன் வாழியே
நீள்வசன பூடணத்தால் நியமித்தான் வாழியே
உத்தமமாய் முடும்பை நகர் உதித்த வள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதோறும் வாழியே.

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s