31. திரட்டுகள்

  1. விசிஷ்டாத்வைத கோட்பாடு என்ன?

த்வைதம் என்றால் இரண்டு உண்டுபரமாத்மாவுக்கு இரண்டாவதாக ஜீவர்கள் மற்றும் ஏனைய உண்டு (மத்வாச்சாரியார்)

அத்வைதம் என்றால் இரண்டு இல்லைபரமாத்மாவை தவிர இரண்டாவது இல்லை, மற்றவை மாயையே (ஆதி சங்கரர்)

விசிஷ்டாத்வைதம் என்றால் விசேஷமான இரண்டு இல்லைபரமாத்மாவை தவிர விசேஷமான இரண்டாவது இல்லை (ராமானுஜர்)

  1. விபூதிகள் எத்தனை?

நித்ய விபூதி  – பரவாசுதேவனுடைய வைகுண்டம், அபிராகிருத மயமானது, லீலா விபூதியை விட மூன்று பங்கு பெரியது (த்ரிபாத்விபூதி)
———————–
விரஜா நதி
———————–
லீலா விபூதி மூல பிரகிருதியால் ஆன பிரம்மாண்ட கோடி அண்டங்கள் கொண்டது

  1. மந்த்ரத்ரயம்/ ரஹஸ்யத்ரயம் எவை?

திருமந்திரம், த்வயம் & சரம ஸ்லோகம்

  1. தத்வத்ரயம் என்றால் என்ன?

தத்வம் என்றால் உண்மை பொருள் & த்ரயம் என்றால் மூன்று.

விபூதியில் மூன்று வகை தத்வங்களே என்பது விசிஷ்டாத்வைத கோட்பாடு.

சித் (சேதனர்) – அறிவுள்ள ஜீவர்கள்

அசித் (அசேதனம்) – அறிவற்ற பொருள்கள்

ஈஷ்வரன் – இந்த இரண்டையும் நியமிக்கும் ஸ்ரீமன் நாராயணன்

  1. குணத்ரயம் என்றால் என்ன?

ஸத்வ – உலகியல் பற்றை விடுத்து மோக்ஷம் அடைந்து பகவானுக்கு அடியேன் சேஷன் என்று கைங்கரியம் புரிவது என்கிற குணம்

ரஜஸ் – உலகியலில் பற்று கொண்டு ஆசை, போட்டி, கோபம் போன்ற குணம்

தமஸ் – தூக்கம், சோர்வு, சோம்பேறித்தனம் போன்ற குணம்

  1. சேதனர்கள் எத்தனை வகை?

மூன்று வகை.

பக்தர் – நம்மை போன்றோர் உள்ள நிலை

முக்தர் – ஸம்சார பந்தம் முக்தி பெற்று வைகுண்டம் அடைந்த நிலை

நித்யர் – என்றுமே ஸம்சார பந்தம் இல்லாத நிலையாய், எம்பெருமானுக்கு தொண்டு புரியும் அனந்தன், கருடன், விஷ்வக்சேனர் etc.

  1. அசேதனங்கள் எத்தனை வகை?

மூன்று வகை.

சுத்தஸத்வம் – வைகுண்டத்தில் உள்ள திருமாமணி மண்டபம் , கோபுரம் போன்ற அசேதனங்கள்

மிஸ்ரஸத்வம் – ஸம்சார மண்டலத்தில் உள்ள ரஜஸ், தமஸ் கலந்த ஸத்வம் கொண்ட அனைத்து அசேதனங்கள்

ஸத்வசூனியம் – ரஜஸ், தமஸ், ஸத்வ குணங்கள் இல்லா காலம் (நாள், பொழுது etc.)

  1. நமது உடல் எதனால் ஆனது?

உடல் பிரகிருதி எனும் கரு மூலம் உருவாகிய பஞ்சபூதங்களால் ஆனது (நீர்,நிலம், நெருப்பு, காற்று & ஆகாசம்). பிரகிருதியால் உருவான எந்த பொருளுக்கும் முக்குணங்கள் உண்டு (ஸத்வ, ரஜஸ் & தமஸ்).

ஆகையால் நமது உடல் பிராகிருதம் ஆனது & மிஸ்ரஸத்வம் கொண்டது. 

  1. ஜீவாத்மா எதனால் ஆனது?

ஜீவாத்மா ஞானத்தால் ஆனது (சுத்தஸத்வம்) மற்றும் அபிராகிருதம் ஆனது.

ஆத்மா சிக்கியுள்ள உடலுக்கு தான் முக்குணங்கள் உள்ளதே தவிர ஆத்மா ஸத்வ மயமானது ஒன்றே.

  1. பிராணன் என்றால் என்ன?

முதலில் தெரிய வேண்டியது ஆத்மாவும் பிராணனும் வெவ்வேறு, ஒன்று கிடையாது.

ஆத்மா உடலை இயக்க தேவையான சக்தியே பிராணன், இது ஒரு வாயு.

பிராண வாயுவோடு  அபானன், வியானன், உதானன் & சமானன் வாயூக்களும் தேவை ஆத்மா உடலை இயக்குவதற்கு.

பேச்சு வழக்கில் நாம் பிராணனோடு நிறுத்தி கொள்கிறோம்.

  1. அனாதி காலமாக இருப்பவை எவை?

பரமாத்மா, வேதம், ஜீவாத்மா & கர்மா

  1. அர்த்த பஞ்சகம் என்றால் என்ன?

வைணவத்தின் ஐந்து அடிப்படை ஞானங்களே அர்த்த பஞ்சகம்.

ஜீவர்கள் ஆகிய ஆத்மாவை பற்றிய ஞானம்

பரமாத்மா ஆகிய ஸ்ரீமன் நாராயணனை பற்றிய ஞானம்

ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் உபாயம் பற்றிய ஞானம்

ஜீவாத்மா பரமாத்மாவை அடையா வண்ணம் தடுக்கும் ஸம்சார விரோதிகள் பற்றிய ஞானம்

ஜீவாத்மா பரமாத்மாவை அடைந்து எப்படி அனுபவித்தல் பற்றிய ஞானம்

வளரும்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s